நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் பந்தல்கால் நாட்டும் வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2023 01:05
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் வைபவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ‘ திருநெல்வேலி ’ எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் ஆனித்தேர் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆனித் தேர் திருவிழா பந்தல் கால் நாட்டும் வைபவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு காலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பந்தல்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காந்திமதி யானை முன்னே நடந்துவர, பந்தல்கால் ஊர்வலமாக தவீதிகளில் எடுத்து வரப்பட்டது. சுவாமி தி வாசல் அருகே பந்தல்கால் நடப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை, பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொாண்டனர். புட்டாரத்தி அம்மன் கோயிலில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந் திருவிழா விநாயகர் கொடியேற்றம் ஜூன் 6ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடக்கிறது. நெல்லையப்பர் தேர் திருவிழா கொடியேற்றம் ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. ஜூலை 2ம் தி முக்கிய திருவிழாவான ஆனித்தேரோட்டம் க்கிறது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் வலம் வருகின்றன.