பரமக்குடி: பரமக்குடி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் இருந்தார். பக்தர்கள் வடைமாலை, எழுமிச்சம் பழமாலை அணிவித்து வழிபட்டனர். பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவருக்கு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் ஈஸ்வரன் கோயில், தரைப்பாலம் சுப்பிரமணிய சுவாமி கோயில், எமனேஸ்வரமுடையவர் கோயில் என அனைத்து கோயில்களிலும் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.