Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் ... பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா: பெண்கள் வழிபாடு பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்

பதிவு செய்த நாள்

15 மே
2023
10:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 23ஆம் ஆண்டு மகா உற்சவம் மற்றும் 14ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, கணபதி ஹோமம், செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், சாகை வார்த்தலும், மாலை 7 மணிக்கு பூங்கரக வீதியுலாவும் நடந்தது. 9ம் தேதி அம்மச்சார் அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் 1008 பால் குட ஊர்வலமும், செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகமும் நடந்தது.

10ம் தேதி பூதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருளாளுக்கு திருக்கல்யாண உற்வசம் நடந்தது. 12ம் தேதி இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் பூபல்லக்கும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு விசேஷ ஹோமமும், அம்மச்சார் அம்மனுக்கு தங்க கவச அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மச்சர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்தலை துவக்கி வைத்தார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், ஊராட்சி தலைவர் முருகன், விழாக்குழுவினர் நாராயணசாமி, கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar