வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 12:05
நாகர்கோவில்: சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று 15ம்தேதி முதல் 19ம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நேற்று (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நடை திறப்பை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவார்கள். இன்று ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்பட்டது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.