முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 12:05
அரியாங்குப்பம்: முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 9ம் தேதி பெருமாள் சூரியபிரபை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 10ம் தேதி சேஷவாகனத்தில் சாமி வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து 11ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.நேற்று இரவு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று சந்தான கோபால ேஹாமம் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.