பழநியில் பக்தர்கள் கூட்டம்; மூன்று மணிநேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 03:05
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. உச்சி கால பூஜையின் போது ரூ.10 தரிசன டிக்கெட் வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. பழநி மலை அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். கிரிவீதியில் ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன நெரிசல் ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ இயக்கினர். அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதி வாகன நெரிசல் ஏற்பட்டது. கிரிவீதி, சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது.