செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் நாளை கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 03:05
செங்கோட்டை: செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் 9 ஆண்டுகளுக்கு பின்பு (16ம் தேதி) கொடை விழா நடக்கிறது.
செங்கோட்டையில் பிரசித்தி வண்டிமலைச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் கொடைவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக கொடை விழா நடத்தப்படவில்லை. கோயிலில் கொடைவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. கடந்த 9ம்தேதி கால் நாட்டு வைவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்து வருகிறது. கொடைவிழாவை முன்னிட்டு இன்று (15ம்தேதி) மாலை 6 மணிக்கு குடியழைப்பு, இரவு 10 மணிக்கு அம்பாள் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 16ம்தேதி) காலை 8 மணிக்கு பால்குடம் வைபவம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அபிஷேகம், மாலை 4.35 மணிக்கு கொடைவிழாவில் சிறப்புபெற்ற அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு முழுக்காப்பு தரிசனம், 10 மணிக்கு அம்பாள் சிங்கவாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 17ம்தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 18ம்தேதி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, ஊர்வலமாக மாலை 6 மணிக்கு குண்டாற்று தெப்பத்தில் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர தேவர் முதாயத்தினர் செய்து வருகின்றனர்.