பதிவு செய்த நாள்
15
மே
2023
04:05
மேட்டுப்பாளையம்: பெள்ளாதியில் உள்ள கோட்டை கரிய மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வருகிறது.
காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சியில், மிகவும் பழமையான கோட்டை கரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா இம்மாதம் ஒன்னாம் தேதி கணபதி ஹோமம், பூச்சாட்டு துவங்கியது. எட்டாம் தேதி சக்தி கம்பம் நடப்பட்டது. அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. நேற்று அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு தாரை, தப்பட்டை முழங்க, வான வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து வருதலும், மாலை, 4:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. 16ம் தேதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து மதியம் பொழி எருது பிடித்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. 17ம் தேதி மஞ்சள் நீராட்டும், 19ம் தேதி மறு பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.