சாத்தூர் சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 04:05
சாத்துார்: சாத்தூர் சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாத்தூர் சிவன் கோயில் வடக்கு ரத வீதி குடியிருப்பு பகுதிகளாக இருந்தது. தற்போது இந்த தெரு முழுவதும் காய்கனிகடைகள், மளிகை கடைகளாக மாறிவிட்டன. சிவன் கோயில் ரதவீதி வழியாக சுவாமி வலம் வர முடியாத வகையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் சென்று வந்த நிலையில் தற்போது இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வெங்கடாஜலபதி கோயில் திரையரங்கத்திற்கு செல்லும் மக்கள் வேறு வழி இன்றி சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. சிவன் கோயில் வடக்கு ராதா வீதியில் நகராட்சி காய்கனி வளாகம் செயல்பட்டு வருகிறது இங்கு உள்ள கடைக்காரர்கள் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அவசர கால நேரங்களில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டி கூட வர முடியாத நிலை உள்ளது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில் வடக்கு ராதா வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.