ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சனார்கோட்டை வாளுடைய அய்யனார் கோயில், வருடாபிஷேக விழா நடைபெற்றது. வருட அபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனித நீர்மூலம், மூலவர் வாளுடைய அய்யனார் மற்றும் பரிகார தெய்வங்களான கருப்பண சுவாமி, காளியம்மன், சோனை கருப்பணசுவாமி, ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருடாபிஷேம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற தீப ஆராதனையில், பிச்சனார்கோட்டை, நோக்கன்கோட்டை, பெத்தார்தேவன் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.