முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2023 01:05
அரியாங்குப்பம்: புதுச்சேரி முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில் இன்று தேரோட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 9ம் தேதி பெருமாள் சூரியபிரபை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 10ம் தேதி சேஷவாகனத்தில் சாமி வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து 11ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழா நேற்று சந்தான கோபால ேஹாமம் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின், வன்னிய பெருமாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபாடு செய்தனர்.