கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள முருக்கம்பள்ளம் பாஞ்சாலியம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுணன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.