நமக்கு எப்போதும் ஏதோ ஒரு தேவை இருந்து கொண்டே இருக்கும். இந்த தேவைதான் நமது வாழ்க்கை ஓட்டத்திற்கு அடிப்படையான விஷயம். ஆனால் இது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பணம், புகழ், பகட்டான வாழ்க்கை, பதவி என பலருக்கும் பலவிதமான ஆசை. அது நிறைவேறினால் சரி. இல்லையெனில் கவலைதான் மிஞ்சும். எனவே முடிந்தவரை ஆசையை குறையுங்கள். அதுதான் நிம்மதிக்கான வழி.