கல்லுாரி ஒன்றின் முதல்வராக இருந்தார் ஜேம்ஸ் கார்பீல்டு. தன் மகனை அங்கு சேர்க்க பெரியவர் ஒருவர் அவரைச் சந்தித்தார். கல்லுாரியில் படிப்பை முடிக்க பல ஆண்டுகள் ஆகிறதே... இவன் படிப்பை முடிப்பதற்குள் இவன் வயதிலுள்ள அனைவரும் வேலைக்கு போய் விடுகின்றனர். சீக்கிரம் படிக்க வழியிருக்கா எனக் கேட்டார். எத்தனை வருடம் படிக்கிறார் என்பதை விட அறிவாளியாக எப்படி மாறுகிறார் என்பது தான் முக்கியம். நீங்கள் எதை எளிதாகவும் விரைவாகவும் பெறுகிறீர்களோ அது உங்களை விட்டு சென்று விடும் என்றார் முதல்வர். எந்த விஷயத்தையும் விரைவாக கற்றுக் கொள்வதை விட ஆழமாக கற்றுக்கொள்ளுங்கள்.