தினமும் உடல் துாய்மைக்காக குளிக்கிறோம். உடல்நலனுக்காக சாப்பிடுகிறோம். ஓய்வும் எடுக்கிறோம். எல்லாம் எதற்காக என பெரியவர் ஒருவரிடம் கேட்டான் சிறுவன். அதற்கு அவரோ இந்த உடல் நம்முடன் பிறந்த கழுதை போன்றது. அது நம்மைச் சுமந்து செல்கிறது. அதனால் இதைக் குளிக்க வைக்கிறோம். உணவளிக்கிறோம். ஓய்வு கொடுக்கிறோம்’’ என்றார். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வேண்டாத தீய பழக்கங்களுக்கு நீ அடிமையாகி விட்டால் கழுதையை நாம் சுமக்கும் சூழல் உருவாகும் என்பதை மறந்து விடாதே’’ என்றார் அவர்.