ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளரிடம் அதன் உரிமையாளரான ஜோன்ஸ் தன்னம்பிக்கையாக பேசுவார். இதைக் கவனித்து வந்த மகனுக்கும் இதே குணம் தொற்றிக் கொண்டது. ஒருநாள் மீன்சந்தைக்குச் சென்றான். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமாக மீனின் விலையை சொன்னார்கள். கடைசியாக அவனது நிலையை புரிந்து கொண்ட பெண் ஒருத்தி, ‘‘ நீ வைத்திருக்கும் பணத்திற்கு மீனின் தலைகள் கிடைக்கும்’’ என்றாள். அவனும் அதை வாங்கினான். சகோதரிகளுடன் சேர்ந்து குழம்பு தயாரித்தான். இங்கு ‘தலைமீன்குழம்பு’ கிடைக்கும். உடலுக்கு நல்லது’ என போர்டு எழுதி ஓட்டல் வாசலில் வைத்தான். கூட்டமும் வர ஆரம்பித்தது. பிறகு என்ன... தொழிலில் நம்பர் ஒன்னாக மாறினான். ‘பாரங்களை சுமக்க தயங்காதீர். கீரிடம் தானாக வரும்’ என்கிறது பைபிள்.