பதிவு செய்த நாள்
22
மே
2023
04:05
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே, அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டி, 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச, மலர் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீப ஆராதனையை தொடர்ந்து, 1008 திருவிளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை, பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது. பூஜையில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.