பதிவு செய்த நாள்
22
மே
2023
04:05
பேரூர்: பேரூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடந்தது. கோவை மாவட்ட, தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ரஸ்) சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி பேரூரில் உள்ள வைதிகர் மண்டபத்தில் நடந்தது. இதில், 15 வடுக்களுக்கு உபநயனம் செய்து வைத்தனர். காயத்ரி கனபாடிகள் தலைமையிலான வைதீகர்கள், வைதீக நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்தனர். இந்நிகழ்ச்சிக்கு, மாநில மூத்த பொதுச்செயலாளர் சங்கரன், மாநில ஆலோசகர் மகாலிங்கம், மாநில செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் பாலாஜி மற்றும் மாவட்ட கிளை ஒருங்கிணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் பல்வேறு கிளைகளை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.