பதிவு செய்த நாள்
22
மே
2023
05:05
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மேற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறு நாள் முதல் சிறப்பு திருமஞ்சனமும், சாமி வீதி உலாவும் நடந்து வந்தது. 7 ம் நாள் உற்சவமாக இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 6 மணிக்கு தேர் நிலை நிறுத்துதல் நடந்தது. 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாரதனையுடன் திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. செண்டை மேளம், வாணவேடிக்கை மற்றும் பஜனை குழுவினரின் பக்தி பாடல்களுடன் மாட வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தேர் திருப்பணிக்குழு முன்னாள் தலைவர் குணசேகர், ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி, ஹிந்து சமய அறநிலையத் துறை மேலாளர் மணி, அலுவலர் இளங்கீர்த்தி, பிரம்மோற்சவ விழா உபயதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர்.