காரைக்குடி: காரைக்குடி நாச்சுழியேந்தல், நல்ல முத்துமாரியம்மன் கோயில், திருவிழாவை முன்னிட்டு, இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். காரைக்குடி செஞ்சை அருகேயுள்ள, அண்ணாமலை பிள்ளையார், முனீஸ்வரர், நல்லமுத்து மாரியம்மன் கோயில் வைகாசி பால்குட திருவிழா கடந்த மே 16 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று நடந்தது. கீழஊரணி பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கரகம் எடுத்து வந்து நல்ல முத்து மாரியம்மனுக்கு செலுத்தினர். மாலையில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று கரகம் மது முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.