திருப்பதி ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 03:05
திருப்பதி : திருப்பதி திருமலையில் ஜூலை, ஆகஸ்ட் மாததிற்க்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை 24ம் தேதி வெளியிடப்படுகிறது.
திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்து வருகின்றனர். ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை 24ம் தேதி, காலை பத்து மணிக்குத் தேவஸ்தான ஆன்லைனில் வெளியிடப்படும் என்று TTD நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://online.tirupatibalaji.ap.gov.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளாம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருவது குறிபிடத்தக்கது.