62 கிராமத்தினர் கலந்து கொண்ட புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 01:05
மேலுார்: வெள்ளலூர் நாட்டில் உள்ள கடம்பூர், செம்பூர், புதுப்பட்டி, அய்யணார் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 16 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர் இன்று வெள்ளலூர் மந்தையில் உள்ள கிராமத்து சார்பில் செய்யப்பட்ட புரவிகளை கிராமத்தார்களும் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் நேர்த்திக்கடன் புரவிகளை பழையூர் பட்டி செல்லும் வழியில் கடம்பூர், செம்பூர். புதுப்பட்டி அய்யணார் கோயில்களுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து எருது கட்டும் விழா(மஞ்சுவிரட்டு) நடைபெற்றது. இத் திருவிழாவில் 62 கிராமத்தினர் கலந்து கொண்டனர்.