பதிவு செய்த நாள்
24
மே
2023
05:05
சூலூர்: குரும்பபாளையம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கல்யாண உற்சவ திருவிழா கோலாகலமாக நடந்தது. சூலூர் அடுத்த குரும்ப பாளையத்தில் அரச குல மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த, 16 ம்தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள், பட்டி மன்றம், பாட்டு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று சீர்வரிசை எடுத்து வருதல், சக்தி கரகம் அழைத்தல் நடந்தது. இன்று அதிகாலை குதிரை வாகனத்தில் அம்மன் அழைத்தலும், 4:30 மணிக்கு, ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.