மேலூர்; ஏ வல்லாளபட்டி சேகரம் செட்டியார்பட்டி நாகம்மாள் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அழகர் கோயிலில் உள்ள நூபுர கங்கையில் பக்தர்கள் தீர்த்தமாடினர். பிறகு பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்த பக்தர்கள் வெள்ளிமலையாண்டி கோயில் வழியாக நாகம்மாள் கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இன்று (மே 24) மந்தையில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புளிக்கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டு அன்னதானம் நடைபெறுகிறது. இதில் செட்டியார்பட்டி, கிடாரிப்பட்டி பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.