வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் விவசாயின் மூக்கை வாசனை ஒன்று துளைத்தது. வாசனை வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு இருந்த மலர்களில் அவரின் மூக்கை துளைத்த வாசனை இல்லை என்பதை தெரிந்து கொண்டார். தொடந்து வாசனை வரும் திசை நோக்கி நடந்த போது அங்கு களிமண் குவியல் இருப்பதை கண்டார். அதில் இருந்து தான் வாசனை வருகிறது என்பதை தெரிந்து கொண்டார் அவர். ‘‘உன்னிடம் எப்படி இந்த வாசனை வந்தது’’ எனக்கேட்டார். என்னிடம் அதிகமான ரோஜா செடிகள் வளர்ந்தன என சொன்னது களிமண். நல்லவர்களுடன் பழகினால் அவர்களுடைய நற்பண்பு கூட வரும் என்பதை தெரிந்து கொண்டார் விவசாயி.