அரசர் ஒருவரை மணக்க அழகான பெண்கள் பலர் போட்டி இட்டனர். ஆனால் யாரையும் அவர் மணந்து கொள்ள விருப்பமில்லை. அச்சமயத்தில் ஒரு அவலட்சணமான பெண் அங்கு வந்தாள். யார் நீ... உனக்கு என்ன வேண்டும் என கேட்டார் அரசர். அவளோ ‘‘ எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள். இயற்கை வளத்தை பாதுகாக்க முயற்சி எடுங்கள்’’. இதை தங்களிடம் அறிவுறுத்தவே வந்தேன் என்றாள். இவளை மணந்து கொண்டால் நாமும் நாடும் வளம் பெறும் என்பதை உணர்ந்தார் அரசர். திருமணம் நடந்தது. அவள் வழிகாட்டுதலாலும் நாடு வளம் மிகுந்ததாக திகழ்ந்தது. அறிவானவர்களே எதிர்காலத்தை நிர்ணயம் செய்வர்.