இளையான்குடி: இளையான்குடி அருகே ஆழிமதுரை சிறுபாலை சோனையா சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு பாத்தியமான பங்காளிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோனையா சுவாமி கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தன. தினந்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் ஆழிமதுரை, சிறுபாலை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.