ஸ்ரீனிவாச திருகல்யாண உற்சவம் கோலாகலம்; பாலக்காடு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2023 10:05
பாலக்காடு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பாலக்காடு ஸ்ரீ ஸ்ரீனிவாசா சேவா அறக்கட்டளையும் ஒருங்கிணைந்து நடத்திய ஸ்ரீனிவாச கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாலக்காடு நகராட்சி இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த உற்சவ நிகழ்ச்சிகள் இன்று காலை 6:00 மணி முதல் ஆரம்பித்தன. தோமாலை சேவை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகள் விழாவையொட்டி நடந்தன. திருப்பதியில் நடக்கும் முக்கிய நான்கு பூஜைகள் இங்கு இலவசமாக தரிசிக்க முடியும் என்பது விழாவின் சிறப்பு. முன்னதாக உற்சவ தேவ-தேவதைகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவம் காண திரண்டு வந்திருந்தனர்.