புதுப்பேட்டை முனீஸ்வரன் கோவில் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2023 04:05
செஞ்சி: புதுப்பேட்டை முனீஸ்வரன் கோவிலில் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. செஞ்சியை அடுத்த புதுப்பேட்டை முனீஸ்வரன் கோவில், ஸ்ரீவீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் 31ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நாளை (30ம் தேதி) காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்த்து சாந்தியும், மாலை 5 மணிக்கு யாகசாலை பிரவேசம், அங்குரார்பனம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜையும் நடக்க உள்ளது. 31ம் தேதி காலை 7 மணிக்கு மூலமந்திர ஹோமம், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9.15 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 10 மணிக்கு கடம் புறப்பாடும், 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.