காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில் உள்ள கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் நேற்று நடந்தது. உற்சவத்தையொட்டி மூலவர் கங்கையம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கும்பம் படையலிடப்பட்டது.