Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி ... சதுரகிரி பவுர்ணமி வழிபாடு; இன்று முதல் பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி சதுரகிரி பவுர்ணமி வழிபாடு; இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க காக வாகனத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வீதியுலா
எழுத்தின் அளவு:
தங்க காக வாகனத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வீதியுலா

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2023
10:06

காரைக்கால் : காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

காரைக்கால் திருநள்ளார் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில்  அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 16ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினம் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள்,பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று முன்தினம்கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து நள்ளாற தியாகேசா தியாகேசா என்று முழக்கமிட்டு இழுத்து சென்றனர். நேற்று 31ம் தேதி இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நள்ளிரவு சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று 1ம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெற உள்ளது.தேர்திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிமக்கள் பலர் கலந்துகொண்டனர்.பக்தர்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி.,சுப்ரணியன் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar