சிவகாசி: சிவகாசியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 ம் ஆண்டு குழந்தைவேலன் காவடி திருவிழா நடந்தது. காத்த நாடார் தெரு முத்தாலம்மன் கோயிலில் இருந்து சிறுவர்கள் காவடி சுமந்து முருகன் கோயில் , பத்ரகாளியம்மன் கோயில், திருத்தங்கல் நாராயணசாமி ஐயா கோயில், கருநெல்லிநாதர் கோயில், முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று தரிசனம் செய்தனர். பள்ளி மாணவர்கள், தாங்கள் நன்றாகப் படித்து , நல்ல நிலைக்கு வர வேண்டும் என வேண்டி காவடி எடுத்து ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து சங்கடஹர சதுர்த்தி பூஜையில் காவடி எடுக்கும் சிறுவர், சிறுமியர் உயர் கல்வி வேண்டி காத்த நாடார் தெரு, செல்வ விநாயகர் கோயிலில் சுவாமிக்கு திராட்சை மாலை சாற்றி வழிபாடு நடைபெறும்.