திருநள்ளார் கோவில் குளத்தில் விட்டுசெல்லும் துணிகளை அகற்றும் பணி திவீரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2023 12:06
காரைக்கால்: கோடைவிடுமுறை என்பதால் சனீஸ்வரபகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் நளன்குளத்தில் விட்டுசெல்லும் துணிகளை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்து பணி தீவிரம்.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் சனிப்பெயர்ச்சி விழா 2அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் வருகின்றனர். இக்கோவிலில் கோடைவிடுமுறை என்பதால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இருவாரம் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது.சனிஸ்வர பகவானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முன்னதாக நளன்குளத்தில் நீராடி விட்டு தங்களது அணிந்த துணிகளை குளத்திலேயே கழற்றி விட்டு.புதிய அடை அணிந்து நோற்றிகடன் செலுத்தியப்பின்னர் கோவிலுக்கு செல்கின்றனர்.நேற்று முன்தினம் ஏராளாமன பக்தர்கள் நளன்குளத்தில் குளித்தனர்.பக்தர்கள் விட்டு சென்ற துணிகள் மூட்டை மூட்டையாக குவிந்தது. இதை கோவில் தேவஸ்தான ஊழியர்கள் உடனுக்குடன் துணிகளை அப்புறப்படுத்தில் நளம் குளத்தில் சுற்றியுள்ள குப்பைகளை தூய்மைப்படுத்து பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.