வெளியூரில் இருந்து வந்த சகோதரியிடம் அக்கா ‘‘ ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டை பாரேன் அவர்கள் வீட்டை பெருக்குவதில்லை. அழுக்கான துணிகள் ஆங்காங்கே தொங்குகின்றன. அழுக்கான ஆடைகளையே அங்குள்ள குழந்தைகள் அணிந்துள்ளன’’ என சொன்னாள் அமலா. அதை பொறுமையாக கேட்ட விமலா ஜன்னல் அருகே சென்று பார்த்தாள்.‘‘அழுக்கு அங்கில்லை. உன் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் தான் உள்ளது’’ என கூறினாள் விமலா. இப்படித்தான் ஒரு சிலர் தன் மீதுள்ள அழுக்குகளை பிறர் மீது திணித்து வாழ்கின்றனர்.