தேசி லிங்கேஸ்வரர் கோவில் மறு சீரமைப்பு பணி அடிக்கல் நாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2023 06:06
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் பழமை வாய்ந்த தேசி லிங்கேஸ்வரர் கோவில் மறு சீரமைப்பு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இக்கோவிலில் ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கோவிலை மறு சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மறு சீரமைப்பு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் முன்னிலை வைத்தார். பூசாரி தினேஷ் சிறப்பு பூஜைகள் செய்தார். விழாவை ஒட்டி தேசி லிங்கேஸ்வரர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில், ஒக்கலிக கவுடர் சமுதாயத்தைச் சேர்ந்த தேசி கவுடர் குலமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.