பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
06:06
அன்னூர்: முதலிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. காட்டம்பட்டி அருகே முதலிபாளையம், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் வளாகத்தில், விநாயகர், திருநாகேஸ்வரர், கன்னிமார் உள்ளிட்ட சுற்று தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) காலை 7:00 மணிக்கு, பிள்ளையார் வழிபாடுடன் துவங்குகிறது. இதையடுத்து, திருவிளக்கு வழிபாடு, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லுதல், முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை (7 ம் தேதி) காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் எண் வகை மருந்து சாத்துதலும், மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு கலசங்கள் மற்றும் மூல மூர்த்தி களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட மடாதிபதிகள் அருளுரை வழங்குகின்றனர்.