பதிவு செய்த நாள்
29
செப்
2012
10:09
வேதாரண்யம்: கள்ளிமேடு தர்ஹாவில் நடந்த மதநல்லிணக்க விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு கிராமத்திலுள்ள அஜ்ரத் காதர் மீரான் சாகிப் தர்ஹாவில் மத நல்லிணக்க விழா நடந்தது. இதில், தர்ஹாவில் மவுலது ஓதப்பட்டது. தொடர்ந்து தோப்புத்துறை அபிபுல்லா குடும்பத்தினரும், கள்ளிமேடு ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினரும் இணைந்து, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சந்தனக்குடம் ஊர்வலத்தை நடத்தினர்.தொடர்ந்து, அதிகாலையில் ரவ்லா சரீப்புக்கு சந்தனம் பூசப்பட்டது. விழாவில் நாகை தாதன் திருவாசல், கல்லார், வேளாங்கண்ணி, கோடியக்கரை, கரியாப்பட்டணம், தோப்புத்துறை பகுதிகளிலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய, இந்து மக்கள் பங்கேற்று, மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.விழா ஏற்பாடுகளை நிர்வாகி சாகுல் அமீது தலைமையில் தோப்புத்துறை, கள்ளிமேடு, தாமரைக்குளம் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.