பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
04:06
அரும்பாக்கம், அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பிரசித்தி பெற்ற பாஞ்சாலி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 40ம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணியளவில், அதே பகுதியிலுள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள், 1,008 பால்குடம் ஏந்தி, அலகு குத்தி, தீச்சட்டியுடன் ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானமும், காப்பு கட்டுதலும் நடந்தது. இன்று மதியம் அன்னதானமும், மாலை இசை கச்சேரியும் நடக்கிறது. நாளை காலை, அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு சந்தன காப்பும், தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.