தாண்டிக்குடி , தாண்டிக்குடி புல்லாவெளி காளியம்மன் கோயில் விழா மூன்று நாள் நடந்தது. விழாவில் குடகானற்றிலிருந்து வானவேடிக்கையுடன் கரகம் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, பறவைக்காவடி , அக்னிச்சட்டி எடுத்தல், கிடா பலியிடல் நடந்தன. மூன்றாம் நாள் முளைப்பாரியுடன் அம்மன் மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலை செல்லுதல் ஆகிய நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்தனர்.