ஹஜ் புனிதப்பயணம் வழியனுப்பு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடை பெற்றது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 04:06
காரைக்கால்; காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹஜ் புனிதப்பயணம் வழியனுப்பு நிகழ்ச்சி கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் அரசு சார்பில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நகராட்சி அலுவலக அரங்கில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் மும்மத பிரார்த்தனைகளுக்கு பிறகு ஹஜ் பயணிகளை கவுரவித்து வாழ்த்தி பேசினார்.இதில் காரைக்கால் மாவட்டத்திலிருந்து 27பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணம் காரைக்காலில் இருந்து 36ஆவது ஆண்டாக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் துனை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், துனை ஆட்சியர் (பே.மே.) பாஸ்கரன். எஸ்.பி.. சுப்ரமணியன்.புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் மற்றும் ஹஜ் கமிட்டி.சமாதான கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.