சோழவந்தான்: சோழவந்தான் அருகே சி.புதூரில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், பெரிய கருப்பசாமி, முப்புலிசாமி கோயிலில் கடந்த ஜூன்.2ல் கெவுலி(பல்லி) அனுமதியுடன் காப்பு கட்டி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஜூன்.8ல் கருப்பச்சாமியின் உற்சவ விழா நடந்தது. ஜூன்.9ல் தீர்த்தக்கரை சாமியாடி தலைமையில் கோயிலில் இருந்து சக்தி கரகம் சுமந்து ஊர்வலமாக காட்டு கோவிலுக்குச் சென்றனர். இதையடுத்து காமாட்சி அம்மன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பூசாரி தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காவல் தெய்வங்களுக்கு காவல் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நேற்று மறுபூஜை சாந்தி செய்து பெட்டி கட்டினர். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.