அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அவிநாசி பதிகம் 10,008 முறை பாராயணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 10:06
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், அவிநாசி பதிகம், 10,008 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவும், உலக மக்கள் அனைவரும் இன்னல்கள் தீர்ந்து சவுபாக்கியங்கள் பெறவும் வேண்டி, நம்பி ஆரூரர் அருளிய அவிநாசி பதிகத்தை, 10,008 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சபா மண்டபத்தில் நடந்தது. கோவில் சிவாச்சாரியார் ஆரூர சுப்பிரமணியம் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு நம்பி ஆரூரர் அருளிய அவிநாசி பதிகத்தை 10,008 முறை பாராயணம் செய்து விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 7:00 முதல் 8:00 மணி வரை அவிநாசியப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியை ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு, ஸ்ரீ நம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபாவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.