ரபீஆ இப்னு கூறுகிறார்: நபிகள் நாயகத்திற்கு பணிவிடைகளை செய்வேன். அவரது இரவுத் தொழுகைகு தேவையானதை தயார் செய்வேன். பின் அவரது வீட்டின் வாசலில் அமர்ந்து துாங்கிவிடுவேன். ஒருநாள் என்னிடம், ‘ஏதாவது தேவை இருந்தால் கூறுங்கள்’ என அவர் கேட்டார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து, அவரிடம், ‘நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்’ எனக் கேட்டேன். அதற்கு, ‘இவ்வாறு கேட்குமாறு யாராவது கூறினார்களா?’ எனக்கேட்டார். ‘யாரும் சொல்லவில்லை. இந்த நிலையில்லாத வாழ்வை விட, நிலையான சொர்க்கத்தை குறித்து கேட்பதுதானே நல்லது என கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் கேட்டது நடக்கும். தர்மச்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்றார். சொர்க்கத்திற்கான பாதையில் நடப்போம் என்பதை இது வலியுறுத்துகிறது.