ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி மேலவீடு ராமாஸ்வாமி கோயில் கொடைவிழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 26ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு ஸ்ரீசீதாதேவி சமேத ஸ்ரீராமாஸ்வாமிக்கு சந்தனகாப்பு தீபாராதனை நடந்தது. 27ம் தேதி அலங்கார தீபாராதனையும், கொடைவிழா தினமான 28ம் தேதி சோமசுந்தரி அம்மன் சன்னதியிலிருந்து மேளதாளத்துடன் ஆற்று நீர் கொண்டு வந்து கலச பூஜை, யாகபூஜை நடந்தது. இரவு சீதாதேவி சமேத ராமாஸ்வாமிகள் பரிவாரஸ்ஸ்வாமிகள் புஷ்ப அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் செல்வராஜ், காரியதரிசி பெருமாள், துணை நிர்வாகிகள் கிழக்கித்துமுத்து, அமிர்தலிங்கம், முருகேசபாண்டியன், வரதராஜ், பேச்சிமுத்து, நாராயணசாமி, மற்றும் சென்னை நிர்வாகிகள் செய்திருந்தனர்.