பதிவு செய்த நாள்
15
ஜூன்
2023
04:06
பெ.நா.பாளையம் : துடியலுார் என்.ஜி.ஜி.ஓ., காலனி கணபதிநகரில் மதுரை வீரன், பட்டத்து அரசி அம்மன் மற்றும் ஆதிஷேச நாகராஜர் திருக்கோவிலில், 8ம் ஆண்டு திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், முனி பூஜை, படைக்கலம் கோவில் வந்து அடைதல், அம்மன் அழைத்தல், அன்னதானம் நடந்தது. நேற்று மதுரை வீரன் வள்ளியம்மாள் பொம்மி அம்மாள் திருக்கல்யாணம், பொங்கல் வைத்தல், பால்குடம், பூவோடு எடுத்தல், அலங்கார பூஜை, அன்னதானம், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 20ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் கணபதி நகர், எஸ்.எம்.நகர் ஊர் பொதுமக்கள் செய்தனர்.