நெல்லையப்பர் கோயில் உண்டியல் திறப்பு; ரூ.13.82 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 03:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.13.82 லட்சம் வசூலானது.
நெல்லையப்பர் கோயிலில் 21 உண்டியல் கடந்த மார்ச் 30ம் தேதி திறந்து எண்ணப்பட்டன. அதன்பின் தற்போது நிரந்தர உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. கண்காணிப்பு அதிகாரியாக நாகர்கோவில் அறநிலையத்துறை உதவிக் கமிஷனர் தங்கம், மேற்கு பிரிவு ஆய்வர் தனலட்சுமி (எ) வள்ளி பங்கேற்றனர். உண்டியலில் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 202 ரொக்கமும், 24 கிராம் எடையில் மாற்று பொன் தங்கமும், 90 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு பணத்தாள்கள் 19ம் கிடைக்கப் பெற்றது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.