பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
04:06
பெரியகுளம்: ஆனி அமாவாசை மற்றும் முதல் வாரம் சனிக்கிழமை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் பகுதிகளில் கோயில்களில் ஆனி அமாவாசை மற்றும் முதல் வாரம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் உட்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்திருந்தார்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வீச்சு கருப்பணசுவாமி கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலனண காமாட்சியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்கள் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.