பகவதி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2023 10:06
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக மூலவர் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1008 மந்திரங்கள் முழங்க பெண்கள் குங்கும அர்ச்சனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானம் நடைபெற்றது.