ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழாவிற்காக தேரினை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டும் ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 22ல் தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தேரினை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது தேரின் கீழ் தட்டு முதல் கலசம் வரை மூங்கில் தட்டுகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதேபோல் கோயில் முன்புள்ள ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் கலை அழகுடன் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. தேரோட்டப் பணிகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.