சர்வதேச யோகா தினம்: திருச்சூரில் என்.சி.சி.,யின் 800 பேர் கலந்த யோகா பயிற்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2023 06:06
பாலக்காடு: சர்வதேச யோகா தினத்தையொட்டி என்.சி.சி., எர்ணாகுளம் குழு தலைமையகத்தின் கீழ் உள்ள கேரள பெண்கள் அணி மற்றும் அணியினர் தலைமையில் கேரள மாநிலம் திருச்சூர் வடக்கும் நாதர் கோவிலின் தெற்கு கோபுரம் நடை முன் யோகா பயிற்சி நடந்தன. காலையில் நடந்த இந்த பயிற்ச்சியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். இத்துடன் போஸ்டர் தயாரித்தல், வினாடி வினா, கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகளும் நடந்தன.